உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் முருகர் வீதியுலா

மாமல்லபுரத்தில் முருகர் வீதியுலா

மாமல்லபுரம் : மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவில், முருகர் வீதியுலா சென்றார். இக்கோவிலில், முருகர், தனி சன்னதியில், வள்ளி, தெய்வானையுடன் வீற்று உள்ளார். கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று முன்தினம் உற்சவம் நடந்தது.காலை, முருக தம்பதிக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடும், அதை தொடர்ந்து, மாலை, திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இரவில், முருகப்பெருமான், வீதியுலா சென்றார். பக்தர்கள் வழிபட்டு தரிசித்தனர்.இங்குள்ள அண்ணாநகர் பகுதி, செல்வ விநாயகர் கோவிலில், நேற்று, மண்டலஅபிஷேக நிறைவு விழா நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, வீதியுலா சென்றார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !