புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3002 days ago
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில், சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா, 20ம் தேதி கொடியற்றத்துடன் துவங்கியது. இரவு, முருகப் பெ ருமான், வள்ளி, தேவசேனை சமேதராக, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சஷ்டியின் ஆறாம் நாளில், சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று முன்தினம், வள்ளி, தெ ய்வானை சமேத குமாரசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.