மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு நவதுர்கை தங்கத்தகடு காணிக்கை
ADDED :2985 days ago
மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி தேவி கர்ப்பகிரஹ கதவில் பொருத்த, நவதுர்கைகள் கொண்ட தங்கத்தகடுகளை, பக்தர் ஒருவர், காணிக்கையாக அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த வக்கீல் ஜெயஸ்ரீ ஸ்ரீதரின் வேண்டுதலை, சாமுண்டீஸ்வரி தேவி நிறைவேற்றியதால், தங்கத்தகடுகளை காணிக்கையாக வழங்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அனுமதி பெற்றிருந்தார்.இதில், நவ துர்கைகள் பொறிக்கும் பணி முடிந்த பின், நேற்று கோவிலுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.