நவ. 2ல் கல்லறை திருவிழா: தங்கவயலில் புதுப்பிப்பு
ADDED :2935 days ago
தங்கவயல்: தங்கவயல் சாம்பியன் ரீப் கல்லறை தோட்டம், மாரிகுப்பம் ராஜர்ஸ்கேம்ப் கல்லறை தோட்டம், கோரமண்டல் பாலகாடு கல்லறை தோட்டம் ஆகியவற்றில் கல்லறை புதுப்பிக்கும் பணிகளில் குடும்பம், குடும்பமாக பலரும் ஈடுபட்டுள்ளனர். தங்கவயல், சாம்பியன் ரீப் பகுதியில் ஹிந்து, கத்தோலிக்க கிறிஸ்தவர், மிஷனரி கிறிஸ்தவர் கல்லறை தோட்டங்கள் பக்கத்தில் உள்ளன. மரித்தோர் தினம் எனும் கல்லறை திருவிழா, நவ., 2ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தங்கவயலை விட்டு வெளியேறி, வெளியூர்களில் குடியேறியவர்கள் கூட, தங்கள் குடும்பத்தினரின் ரத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருவர். கல்லறை திருநாளுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் கல்லறைகளை புதுப்பிக்கும் பணியில், நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி சார்பில், 10 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர்கள், கல்லறைக்குள் செல்ல நடைபாதை, மின் விளக்குகள், தகன மேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. தங்கவயலில் உள்ள பாலகாடு, ராஜர்ஸ்கேம்ப், சாம்பியன் கல்லறை தோட்டங்களில் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.