கப்பளாங்கரை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :2982 days ago
பொள்ளாச்சி : நெகமம் அருகே, கப்பளாங்கரை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. நெகமம் அடுத்துள்ள கப்பளாங்கரை கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா நடக்கிறது.இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த, 23ம் தேதி மகாகணபதி ேஹாமம் மற்றும் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இன்று இரவு, சக்தி கலசம் அழைத்தல் நடக்கிறது.நாளை அதிகாலை திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம், பூவோடு எடுத்தலும் நடக்கிறது. இரவு, 7:00 - 10:00 மணிக்குள் கம்பம் விஜர்சனம் செய்யப்படுகிறது. நவ., 2ம் தேதி மஞ்சள் நீராடலும், 3ம் தேதி மகா அபிேஷகமும் நடக்கிறது.