உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை

வரதராஜப்பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை

கொடைக்கானல் கொடைக்கானலில் ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 48 வது மண்டல பூஜை விழா நடந்தது. மங்கள இசையுடன், விக்னேஸ்வர பூஜை, யாகசலை சங்கல்பம், அனுக்ஞை, புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனையும், காலை 9:30 மணியளவில் அக்னி பிரதிஷ்டை, கும்ப பூஜையும், 10:00 மணியளவில் கணபதி ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், லட்சுமி நரசிம்ம சுதர்ஷன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பிரதான ஹோமங்கள், திருமஞ்சன நிகழ்ச்சியும நடந்தன. காலை 10:45 மணியளவில் பூர்ணாஹூதி, கும்பம் புறப்பாட நடந்தது. 11:00 மணியளவில் கும்ப திருமஞ்சன நிகழ்ச்சியும், 11:30 மணியளவில் திருவாராதனம், சற்றுமுறை, யஜமானர் மரியாதை, பிரஸாத வினியோகமும், 12:00 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !