கரபுரநாதர் கோவிலில் வரும் 3ல் அன்னாபிஷேகம்
ADDED :2932 days ago
உத்தமசோழபுரம்: கரபுரநாதர் கோவிலில், வரும், 3ல் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஐப்பசியில் வரும் பவுர்ணமியன்று, அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், 26ம் ஆண்டாக, வரும், 3ல் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை, மூலவர் கரபுரநாதருக்கு, சிறப்பு அபிஷேகம், மாலை, பலவித காய்கறி, அன்ன அலங்காரத்தில் மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, மனோன்மணி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள் வடம்பிடித்து கோவிலை வலம்வருவர். இரவு, மறுபூஜை செய்து, மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்ட காய்கறிகளை, சாதத்துடன் கலந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.