உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரி கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா

ஏரி கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா

பெருந்துறை: பெருந்துறை அருகே, ஏரிக் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. பெருந்துறை அடுத்த, காசிப்பில்லாம்பாளையம், சேலம் கோவை புறவழிச்சாலை அருகே, ஏரிக்கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. நேற்று கோவிலில், பொங்கல் விழா நடந்தது. அதிகாலை முதலே, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !