ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :2976 days ago
ராசிபுரம்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி முதல் பவுர்ணமியன்று, அன்னாபிஷேகம் விழா, பரம்பரை அறக்கட்டளை தாரர்களால் நடத்தப்படும். முன்னதாக கைலா சநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு, பல்வேறு அபிஷேகம் நடத்தப்படுகி றது. தொடர்ந்து, சுவாமி, அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. இதேபோல், ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்மலை சித் தேஸ்வரர் மலைக்கோவிலில் அன்னாபிஷேக விழா, இன்று நடக்கிறது. முன்னதாக, விநாயகர் பூஜையை தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அன்னா பிஷேகமும், பிரதோஷ வழிபாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் செய்து வருகி ன்றனர்.