கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவிலில் பாலாலய விழா
ADDED :2977 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருகாம்புலியூர் பஞ்சாயத்து, மேட்டு திருகாம்புலியூர் கிராமத்தில், 100 ஆண்டு கள் பழமை வாய்ந்த பிடாரி அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. கோவில் கோபுரம் மிகவும் சிதலமடைந்து, மோசமான நிலையில் இருந்தது. கோபுரத்தை புதிதாக கட்ட முடிவு செய்து, தற்போது அதற்கான முதல் கட்டப்பணிகள் துவங்கின. நேற்று முன்தினம் காலை, முதல் கால யாக சாலையில் கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை, 11:30 மணியளவில் இரண்டாம் கால பாலாலய யாகங்கள், அம்மன் சிறப்பு அபிஷேகம், மற்றும் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. பாலாலய சிறப்பு பூஜைகளை, சுந்தரம் சுவாமிகள் செய்தார். நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.