திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அன்னாபிஷேகம்
ADDED :2928 days ago
திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெரு மானுக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடந்தன.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள
சத்திய கிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனை
நடந்தது.
கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவர், சன்னதி தெரு சொக்கநாதர்
கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.மலைக்கு பின்புறமுள்ள பால் சுனை
கண்ட சிவ பெருமான், பஞ்சலிங்கத்திற்கு மூலிகை அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து
அன்னத்தை சாத்துப்படி செய்து காய்கறிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. திருநகர்
சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில்களிலும்
காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.