உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :2928 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. முன்னதாக சந்தனம், குங்குமம், பால் உள்ளிட்டவைகளால் பல்வேறு அபிேஷகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு பூஜையில் உப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.