மதுரை திருவாடுதுறை ஆதின மடத்தில் நவ.17ல் தேவார தமிழிசை மாநாடு
ADDED :2977 days ago
மதுரை, மதுரை திருவாடுதுறை ஆதின மடத்தில், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில், தேவார தமிழிசை மாநாடு நவ.,17 மாலை 5:00 மணிக்கு துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சிவன் கூறியதாவது: நவ., 17ல் கரூர் சுவாமி நாதன் குழுவினரின் திருஞானசம்பந்தர் தேவார இசை மற்றும் நவ.,18ல் திருநாவுக்கரசர் தேவார இசை அரங்கம், வீணையில் திருமுறை இசை நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 19ல் சிவனடியார்கள் சிவபூஜை செய்கிறார்கள். இத்துடன் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. இசைத்துறையில் சாதித்த கலைஞர்களுக்கு திருநாவுக்கரசர் இசை விருது வழங்கப்படுகிறது, என்றார்.