மஹா கணபதி கோவில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2968 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த, வீட்டுகட்டியில் அமைந்துள்ள மஹா கணபதி கோவிலில், நேற்று முன்தினம் இரவு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., லாலாப்பேட்டை அருகே உள்ள வீட்டுகட்டியில், பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனப்பொடி ஆகிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதில் லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.