ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உழவார பணி
ADDED :2923 days ago
ராமேஸ்வரம்: துாய்மை இந்தியா திட்டத்தின் படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள், கோயில் தெற்கு நந்தவனத்தில் இருந்த முள்செடிகளை அகற்றி, துாய்மை செய்தனர். மாணவர்கள் உழவார பணியை கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி துவக்கி வைத்தார். கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ராமேஸ்வரம் அரசு பள்ளி என்.சி.சி., ஆசிரியர் பழனிச்சாமி, காரைக்குடி என்.சி.சி., சுபேதார் இளங்கோவன், அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட ஆசிரியர் ஜெயகாந்தன், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் பலர் பங்கேற்றனர்.