விக்கிரவாண்டி கோவிலில் லட்சுமி சுதர்சன ஹோமம்
ADDED :2971 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில், லட்சுமிநரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது. விக்கிரவாண்டி டோல் கேட் அருகில் தாமரை குளத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை லட்சுமிநரசிம்ம சுதர்சன ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், கணபதி பூஜையுடன் ேஹாமம் துவங்கியது. நேற்று காலை லட்சுமிநரசிம்ம சுதர்சன ேஹாமம், பூர்ணாஹூதி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு செப்பு கவசம் அணிவித்தனர். பகல் 12:45 மணியளவில் மகா தீப ஆராதனை நடந்தது. அய்யூர் அகரம் கோபால் பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர்.