உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சேத்தியாத்தோப்பு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர்கோவிலில்  கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரசக்தி ஆஞ்சநேயர்கோவிலில் நேற்று கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மூலவர் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவியப்பொடி, வெட்டிவேர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் ஆன சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வீரசக்தி ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு  மலர்களால் ஆன மாலை, வெற்றிலை, துளசி மாலை, வடமாலை சாற்றி தீபாராதனை நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்கள் மற்றும் ஆயுள் விருத்தி பெற நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !