திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா
ADDED :3248 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார்.அம்பாள் முன், வெள்ளி குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. வீதி உலா நிகழ்ச்சியில் தெய்வானை அருள்பாலித்தார்.