உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபம்: பக்தர் தரிசனம்!

கோட்டை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபம்: பக்தர் தரிசனம்!

சேலம்: சேலம் கோட்டை பெருமாள் கோவிலில், நேற்று நடந்த திருக்கார்த்திகை தீப விழாவில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம், சிவன், முருகன் கோவில்களில், டிசம்பர் 8ம் தேதி, திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. அதற்கு அடுத்த நாள் பெருமாள் கோவில்களில் திருக்கார்த்திகை தீப விழா நடப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டில், நேற்று முன்தினம் சந்திர கிரஹனம் என்பதால், திருக்கார்த்திகை தீபம் நடத்தவில்லை. அதையடுத்து, திருக்கார்த்திகை தீப விழா, நேற்று நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மாலையில் தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. அம்மாபேட்டை சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில், நேற்று திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. நேற்று மாலை, 1,008 விளக்குகள் ஏற்றப்பட்டு சரஸ்பர நாமத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !