உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூர்மாங்க சனீஸ்வரருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை

கூர்மாங்க சனீஸ்வரருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை

விழுப்புரம் : கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் உள்ள கூர்மாங்க சனீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் உள்ள கூர்மாங்க சனீஸ்வரருக்கு வரும் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் சிவக்குமார் செய்திருந்தார். வரும் 17ம் தேதி காலை 6 மணிக்கு சனி ஹோரை யில் சனி பிரீதியும், 20ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. பின் 21ம் தேதி காலை 7.24க்கு சனீஸ்வரர் கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்கு இடமாறுவதையொட்டி கூர்மாங்க சனீஸ்வரர் சுவாமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !