உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைப்பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் சாலை படுமோசம்: பக்தர்கள் அவதி!

மலைப்பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் சாலை படுமோசம்: பக்தர்கள் அவதி!

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலைப்பிள்ளையார் கோவில் அடிவாரத்தில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் புகழ் பெற்ற மலைப்பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஞாயிற்று கிழமைகளில் ராகு கால பூஜைக்கு பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் தை மாதம் நடக்கும் கரிநாள் திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலின் அடி வாரத்தைச் சுற்றி போடப்பட்ட தார் சாலையில் தற்போது குளக்கரையிலிருந்து கோவிலுக்குச் செல்லும் சாலை வரை கருங்கற்கள் பெயர்ந்து பக்தர்கள் நடக்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு வரும் கரிநாள் திருவிழாவிற்குள் அதிகாரிகள் இச்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !