உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருச்சானூர், பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம், இன்று கொடி யேற்றத்துடன் துவங்க உள்ளது.திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், தேவஸ்தானம் சார்பில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று காலை, தாயார் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.நேற்று, கோவிலில் லட்ச குங்குமார்ச்சனையும், நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணமும் நடந்தது. வரும், 23ம் தேதி, பஞ்சமி தீர்த்தத்துடன், வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !