இமயமலையில் பாபா தியான மையம் திறப்பு
ADDED :2983 days ago
சென்னை: இமயமலையில், ரஜினி மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கட்டப்பட்ட, "பாபா தியான மையம் நேற்று திறக்கப்பட்டது.பாபா பக்தரான, ரஜினி, அடிக்கடி இமயமலைக்கு செல்வார். அங்கு, பாபாஜி குகையில் தியானம் இருப்பது, அவருக்கு பிடித்தமானது. ரஜினி மற்றும் அவரது நண்பர்கள், இணைந்து, பாபாவை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கி, தியானம் செய்யும் வகையில், ஸ்ரீ பாபாஜி தியான மையம் அமைத்துள்ளார். இதன், கிரகப் பிரவேசம் நேற்று நடந்தது. பாபா தியானம் செய்த குகைக்கு சென்று பூஜை செய்த பின், கட்டட கிரகப் பிரவேச விழாவை நடத்தி உள்ளனர். இதில், ரஜினி பங்கேற்கவில்லை. விரைவில், அவர் தியான மையத்திற்கு செல்வார் என, அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.