குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் உண்டியல் அடித்தளம் விரிசல்
ADDED :2986 days ago
குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் முன் மண்டபத்தில் உள்ள மிகப்பெரிய உண்டியல், சிமென்ட் கட்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
குளித்தலை நகராட்சி, 8வது வார்டில், தமிழகத்தில் உள்ள சிவன் தளங்களில், சிறப்பு வாய்ந்த தளமான கடம்பவனேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் முன் பகுதியில், திறந்தவெளி மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மிகப்பெரிய உண்டியல் வைக்கப் பட்டுள்ளது. இதைச்சுற்றி, தடுப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது விரிசல் விட்டு காணப்ப டுகிறது. இது பக்தர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவில் நிர்வாகம் உண்டியலை பாதுகாக்கும் வகையில் சிமென்ட் தளத்தை சீர் செய்யவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.