ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்
ADDED :2888 days ago
கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். அதிகாலை 5:00 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு நேற்று ஐயப்ப பக்தர்கள் விரதமிருக்க துவங்கினர். தொண்டி அருகே செல்லியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். திருவாடானை மற்றும் சின்னக்கீமங்கலம் ஐயப்பன் கோயில்களில் சுவாமிக்கு நெய் அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் ஐயப்பன் பாடல்களை பாடி வழிபட்டனர்.