உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி கோவிலில் 250 துறவிகள் பங்கேற்ற மகா ருத்ர ஜெபம்

குமரி கோவிலில் 250 துறவிகள் பங்கேற்ற மகா ருத்ர ஜெபம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், உத்தரகாசி ஆதிசங்கர பிரம்ம வித்யா பீடம், வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமம், திருவனந்தபுரம் ஆர்ஷ்வித்யா பிரதிஷ்டானம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய பகவத் பாதபக்த மண்டலி என்ற அமைப்பின் சார்பில் நமாமி சங்கரம் என்ற நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நேற்று தொடங்கியது. இது டிச., 3ம் தேதி வரை நடக்கிறது. காலையில் சூரிய உதயத்தின் போது கொடியேற்றப்பட்ட பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் காலை 8:00 முதல் 12:30 வரை மகாருத்ர ஜெபம் நடந்தது. இதில் 250 துறவிகள், 121 வேத பண்டிதர்கள், மற்றும் பகவத்பாத பக்த மண்டலி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாலையில் கடற்கரை ஆதிசங்கரர் கோயிலில் இருந்து, விவேகானந்தா கேந்திரா வரை துறவிகளின் பேரணி நடந்தது. டிச., ௧ இரவு 7:00 மணிக்கு பாரத மாதா பூஜை நடக்கிறது. இந்தியாவின் படம் வரைந்து 120 புண்ணிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் துாவி பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !