பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :3213 days ago
தேவிபட்டினம்: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற தலைவி பிரேமா ரெத்தினம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ், பொருளாளர் சுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், சத்தியசீலன், மூர்த்தி, கோவிந்தராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.