பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நவ.,24ல் மகா கும்பாபிேஷத்தை முன்னிட்டு, நேற்று கணபதி ேஹாமத்துடன் சிறப்பு யாகபூஜைகள் துவங்கியது.
பழநியில் தைப்பூச விழா நடைபெறும் கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குபின் கும்பாபிேஷகம் நவ.,24ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று காலையில் அமர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர்கள் கொண்ட குழுவினர் மூலம் கணபதிபூஜை, நவக்கிரக ேஹாமம் பூஜைகள் நடந்தன. இன்று மாலை 6:00மணிக்குமேல் முதல்கால யாகசாலை பூஜை துவங்கி நவ.,24வரை ஆறுகால யாகபூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து கோலம் வரைப்பட்டது.
நவ.,24ல் காலை 6:15மணி 7.15மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்கிறது. அன்று மாலை கைலாசநாதர், பெரியநாயகியம்மனுக்கும் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. கணபதிபூஜையில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.