தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2895 days ago
தஞ்சாவூர்: கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று, சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம் திங்கள் கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரகதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சன்னதி முன்பு 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.