உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பையாற்றில் சேகரிக்கப்பட்ட துணிகளை பெரியகுளத்தில் காயவைக்க மக்கள் எதிர்ப்பு

பம்பையாற்றில் சேகரிக்கப்பட்ட துணிகளை பெரியகுளத்தில் காயவைக்க மக்கள் எதிர்ப்பு

கேரள மாநிலம் பம்பையாற்றில் ஐயப்ப பக்தர்கள் விட்டுச்சென்ற ஈரத்  துணிகளை பெரியகுளத்தில் காயவைத்து விற்பனைக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டவரை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.  அவர்  மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பம்பையாற்றில் குளித்துச் செல்கின்றனர். அவர்களில் சிலர் வேட்டி, சட்டை, துண்டு உள்ளிட்டவற்றை பாவங்கள் போகும் எனக்கருதி ஆற்றில் கழற்றிவிட்டுச் செல்கின்றனர். இதனால் நீர் மாசுபடுவதாக புகார் எழுந்தது.

அந்த ஆற்றில் குவிந்துள்ள பழைய துணிகளை அப்புறப்படுத்த  கேரள உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. இதனால் திருவாங்கூர் தேவசம் போர்டு  துணிகளை அகற்ற டெண்டர் விட் டது.  இதனை  பெரியகுளத்தைச் சேர்ந்தசெல்வக்குமார், 34, என்பவர்  டெண்டர் எடுத்துள்ளார்.  ஆற்றில் ஈரமாக கிடந்த 12 டன் துணிகளை,மூடையாக கட்டி  லாரியில் நேற்றுமுன்தினம்  பெரியகுளம் அருகே சருத்துப்பட்டிவசந்தம்நகரில், காலி இடத்தை வாடகைக்கு எடுத்து இறக்கியுள்ளார். துணிகளை காயவைத்து,பழையவற்றை கழித்து  மற்றவற்றை சலவை செய்து,பேக்கிங் செய்து விற்றுவிட திட்டமிட்டிருந்தார். ஈரத்துணிகளை நேற்று அந்தப் பகுதியில் காயவைத்துள்ளார்.

எதிர்ப்பு: அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலை யில் சுகாதாரக்கேடு, மேலும் நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால்  துணிகளை அப்புற ப்படுத்த மக்கள்  அவரை சூழ்ந்து கொண்டு வலியுறுத்தினர்.

தாசில்தார் கிருஷ்ணகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. தாசில்தார்,   செல்வக்குமாரிடம் உடன டியாக துணிகளை அப்புறப்படுத்துமாறு எச்சரித்தார்.

தாசில்தார் கூறுகையில்,செல்வக்குமார் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இரவில்  லாரியில் கொண்டுவந்து  கொட்டப்படும் பொருட்களை மக்கள் கண்காணிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !