சிருங்கேரி மடத்தில் பஜனை பக்தி பாடல் கச்சேரி
ADDED :2889 days ago
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் சிருங்கேரி சாரதா பீடத்தில். கமலானந்த நரசிம்ம பாரதி சுவாமிகள், ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை விழா முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, கோவை பிரியதர்ஷினி குழுவினரின் பஜனை இசை நாமசங்கீர்த்தனம் பக்தி படல்கள் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் கிளை சிருங்கேரி சாரதா பீடத்தில் கடந்த, 19 முதல், கமலானந்த நரசிம்ம பாரதி சுவாமிகள், ராமானந்த சுவாமிகள் ஆராதனை விழா, சாரதா பீடத்தின் பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதி சுவாமிகள் சார்பில் நடக்கின்றது. தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, கோவை பிரியதர்ஷினி குழுவினரின், பஜன நாம சங்கீர்த்தனம் பக்தி படல் இசை நிகழ்ச்சி நடந்தது.