உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவிலில் சோமவார திருமுறை தமிழிசை விழா

ஏகாம்பரநாதர் கோவிலில் சோமவார திருமுறை தமிழிசை விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கார்த்திகை சோமவார திருமுறை தமிழிசை விழா நடந்தது. காஞ்சிபுரத்தில், நால்வர் நற்றமிழ் மன்றம் உள்ளது. இம்மன்றம் சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடக்கும் சோமவார திருமுறை தமிழிசை விழா, 40வது முறையாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. கலைமாமணி, திருத்தணி என்.சுவாமிநாதன் ஓதுவார், திருமுறை விண்ணப்பம் நிகழ்த்தினார். கார்த்திகை மாதம், அனைத்து திங்களன்றும், மாலை, 6:00 மணிக்கு, ஓதுவார்கள் மூலம், திருமுறை விண்ணப்பமும், கடைசி வாரமான, டிச., 11ல், லட்சதீப பெருவிழா வும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !