பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்: பூந்தேரை இழுத்துவந்த பெண்கள்
ADDED :2886 days ago
செவ்வாய்ப்பேட்டை: வெங்கடாஜலபதி கோவிலில், பூந்தேரில் எழுந்தருளிய மகாலட்சுமி தாயாரை, ஏராளமான பெண்கள் வடம்பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, வெங்கடாஜலபதி கோவிலில், பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழா, கடந்த, 18ல் விஷ்வக்சேனர் பூஜையுடன் தொடங்கியது. நேற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில், பத்மாவதி தாயார், மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார். அவரை, பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர். இன்று காலை, 11:00 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாகம் நடக்கிறது. மாலை, அன்னப்பாவாடை உற்சவத்துடன், தாயார் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.