உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவில் கார்த்திகை திருவிழா துவக்கம்

அண்ணாமலையார் கோவில் கார்த்திகை திருவிழா துவக்கம்

ராசிபுரம்: கல்லாங்களம், அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ராசிபுரம் அருகே, கல்லாங்குளத்தில், அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டுக்கான விழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாட்கள் உற்சவ விழா நடக்கிறது. முன்னதாக, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில், கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது. டிச.,2 காலை, 5:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றுதல், அன்று மாலை 3,937 உயரம் கொண்ட போதமலை உச்சியில் தீபக்கொப்பரை, திரிகாடா துணி, நெய் ஆகியவை அனுப்பப்படுகின்றன. மாலை, 5:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்படுகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !