உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேர்வீடு பகவதியம்மன் கோயில் கும்பாபிேஷகம்

சேர்வீடு பகவதியம்மன் கோயில் கும்பாபிேஷகம்

நத்தம், நத்தம் அருகே சேர்வீட்டில் பகவதி அம்மன் கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது. கடந்த நவ.,20 அன்று காலை அனுக்ஞை, விக்னேஷவர பூஜை, நவக்கிரஹ ேஹாமத்துடன் விழா துவங்கியது. மறுநாள் வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட முதல்கால யாக பூஜைகள் நடந்து. நவ.,22 அன்று இரண்டு, மூன்றாம் கால யாக பூஜைகளும், நேற்று கஜ பூஜை, லெட்சுமி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட நான்காம் கால யாக பூஜைகளும் நடந்தன. கரந்தமலை கன்னிமார் கோயில், அழகர்மலை உட்பட தீர்த்த தலங்களில் இருந்து வந்த புனிநீர் புறப்பாடு நடந்தது. பின், கருடன் வட்டமிட, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. ஆண்டியம்பலம் எம்.எல்.ஏ., முன்னாள் நத்தம் தொகுதி அ.தி.மு.க., பொறுப்பாளர் கண்ணன் உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !