கோவை சாரதாம்பாள் கோவிலில் பிரதிஷ்டை தின விழா
ADDED :2891 days ago
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் 38வது பிரதிஷ்டை தின விழா இன்று(நவ.24) நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள பால விநாயகர், பாலசுப்ரமணியர், ஆதி சங்கரர், சாரதாம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபண ராதனை நடந்தது. இத்திருக்கோவில் 25.-11.-1979 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 9ஆம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை முதலே ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.