தங்க சூரிய பிறை வாகனத்தில் அண்ணாமலையார் உலா
ADDED :2891 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் இரண்டாம் நாளான இன்று (நவ.24) காலை உற்சவத்தில் தங்க சூரிய பிறை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மூஷிக வாகனத்தில் விநாயகர் ராஜகோபுரம் அருகே எழுந்தருளிய போது கோவில் யானை ருக்கு தனது துதிக்கையை உயர்த்தி வணங்கியது. சுவாமிகள் மாட வீதி உலா வரும்போது பின்னால் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல வழிசெய்யுமாறு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.