வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்படி திருவிழா
ADDED :2973 days ago
கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 43வது திருப்படி திருவிழா நடந்தது. வெங்கமேடு நேரு நகரில் இருந்து நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், 108 பால், தீர்த்த குடம், காவடிகள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். பிறகு, மலைக்காவலர் வழிப்பாட்டை தொடர்ந்து, ஜெகநாத ஓதுவார் முன்னிலையில், திருப்புகழ் பாடி படிபூஜை நடந்தது. தொடர்ந்து, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.