ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்
ADDED :2890 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு, கே.வி.ஆர்., நகரிலுள்ள ராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. நேற்று காலை வெங்கடேச சுப்ரபாதம், தோமாலை சேவை, அலங்காரம், வேத பாராயணம் நடந்தது. அதன் பின் திருகல்யாணம், ஸ்வஸ்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.