உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை அடைப்பு இல்லை: தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலை நடை அடைப்பு இல்லை: தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலை: சபரிமலை நடை டிச.,6 வரை அடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி ஒருவர் கூறியது: பந்தள மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அம்பா தம்புராட்டி, 94 வயோதிகத்தால் நேற்று முன்தினம் காலமானார். இதனால் பந்தளத்தில் நடைபெறும் திருவாபரண தரிசனம் மட்டும் டிசம்பர் 6 வரை நிறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை வழிபாடுகளிலோ, நடை திறப்பிலோ, தரிசன நேரங்களிலோ எந்த மாற்றமும் இல்லை, என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !