விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2886 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இங்கு கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று, இக்கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயிலில் சொக்கநாதசுவாமிக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.