பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
ADDED :2868 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, பட்டணத்தில், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த, 28ல் கிராம சாந்தியுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. நேற்று, காவிரி தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல், முளைப்பாரி ஊர்வலம், மாலை, விநாயகர் பூஜை, தீபாராதனை உபசாரம் நடந்தது. இன்று காலை, கோபுர கலசம் வைத்தல், நூதன பிம்பம் சயனாதி வாசம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, செல்வ விநாயகர், கற்பக விநாயகர், வடபத்ரகாளியம்மன் மூலவர் மற்றும் கருப்பணார் முதலிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, பூஜைகள் நடந்து, பிரசாதம் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.