உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் சனீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷகம், நேற்று விமர்சையாக நடந்தது. கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் தீர்த்தகுள சனீஸ்வரர் கோவில் புதியதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த, 27ல், கோ பூஜை, தன பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, சுவாமி சிலைகள் ஊர்வலம் வருதல், விமான கலச கோபுரம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, மஹா பூர்ணாதியும், கடம் புறப்பாடும் நடந்தது. இதையடுத்து விமான கோபுரத்திற்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !