சபரிமலையில் பலத்த மழை: பக்தர்கள் சிரமம்
ADDED :2917 days ago
சபரிமலை: சபரிமலையில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சீசனில் அவ்வளவாக மழை இல்லை. ஆனால் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக பம்பையில் இருந்து அப்பாச்சிமேடு வரை பாதை வழுக்கியதால், மெதுவாகதான் மலையேற முடிந்தது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாமல் சிரமப்பட்டனர். சன்னிதானத்தில் தங்குவதற்கும், நிற்பதற்கும் கூட இடமில்லாமல் சிரமப்பட்டனர். மழையால் நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டதால் நேற்று வந்த பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது.