பாகூர் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2879 days ago
புதுச்சேரி பாகூர் கிராமத்தில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தற்போது தொல்லியல் து றை கட்டுப்பாட்டில் உள்ளது. வேதநாயகி சமேத மூலநாதராக அருள்பாலிக்கும் இந்த திருக்கோயில் கடந்த 2002 ஆண்டு குடமுழக்கு நடந்தது. தற்போது பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு 30.11.2017. காலை 9.30மணிக்கு சிவாச்சாரியர்களால் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாக சாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பட்டு மூலவர் கலசம் மற்றும் ராஜகோபுரம்,மற்ற சன்னதிகளுகு்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் சமச்சிவாய கோஷம் முழந்த சிறப்பாக நடந்தது.