ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாவைத் தனியன்கள் பட்டர் அருளிச்செய்தது நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தேகோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய உய்யக் கொண்டார் அருளியவைநேரிசை வெண்பா அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை, பூமாலைசூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை,பாடி யருளவல்ல பல்வளையாய்,-நாடிநீவேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்நாங்கடவா வண்ணமே நல்கு ஆண்டாள் திருவடிகளே சரணம் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றேவல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய நினைப்பதும் செய்வதும் அவனுடைய அருளால்தான். ஸ்ரீமத் நாராயணனே நமக்குக் கைங்கர்ய செல்வம் தருவான் என்பதை ஆண்டாள் அறுதியிட்டு அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறாள். பக்தர்கள் திருப்பாவையையேனும் அறிந்து தினமும் அனுஸந்திக்க வேண்டும். இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா நாராயணனே பறை தருவான் 474. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாரா யணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். நோன்பு நோற்போர் மேற்கொள்ள வேண்டியவை 475. வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். உத்தமன் பேர்பாட நீங்காத செல்வம் நிறையும் 476. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். யாங்கள் வாழ மழைபொழியச் செய் 477. ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். தாமோதரனைச் சொல்லு 478. மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். அரி என்று எங்கும் பேரொலி 479. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோபிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொழுது புலர்ந்து விட்டதே! எழுந்திரு 480. கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோதேச முடையாய் திறவேலோர் எம்பாவாய். பாவாய்! எழுந்திரு 481. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடையபாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். மாதவன் திருநாமங்களைச் சொல் 482. தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். பறைதரும் புண்ணியன் நாராயணன் 483. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால்பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்தகும்ப கருணனும் தோற்றும் உனக்கேபெருந்துயில்தான் தந்தானோ ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். யாவரும் வந்தனர்: நீ எதற்காக உறங்குகிறாய்? 484. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியேபுற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். மனத்துக்கு இனியவனைப் பாடுகிறோமே! நீயும் வா 485. கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பிள்ளைகள் யாவரும் வந்தனர்: நீயும் நீராட வா 486. புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதேபள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். எங்களை எழுப்புவதாக அன்றோ நீ சொன்னாய்! 487. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். நீயும் வந்து மாயனைப்பாடு 488. எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். திருப்பள்ளி எழுச்சி பாடவா 489. நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடையகோயில்காப் பானே கொடித்தோன்றும்தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவவாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீநேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். யாவரும் உறங்காது எழுமின் 490. அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய். நப்பின்னை நங்காய்! மகிழ்ந்து வந்து கதவைத்திற 491. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்பவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். தத்துவமன்று! வாய் திற 492. குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். விமலா? நப்பின்னை நங்காய்! எழுந்திருங்கள் 493. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். போற்றிப் புகழ்ந்து வந்தோம்! துயிலெழாய் 494. ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு 495. அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலேசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோதிங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க 496. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடையசீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். உன் சேவகம் போற்றி வந்தோம்! இரங்கு 497. அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றிபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றிகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். நெடுமாலே! பறை தருதி 498. ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். ஆலினிலையாய்! அருள் 499. மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். பறைதருக; யாங்கள் சன்மானம் பெறுவோம் 500. கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகச்சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். உறவை ஒழிக்கமுடியாது 501. கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடுஉறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைசிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதேஇறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய். உனக்கே நாம் ஆட்செய்வோம் 502. சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீகுற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தாஎற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய் 503. வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சிஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய். அடிவரவு : மார்கழி வையத்து ஓங்கி ஆழி மாயனை புள்ளும் கீசு கீழ்வானம் தூமணி நோற்று கற்று கனைத்து புள்ளின் உங்கள் எல்லே நாயகன் அம்பரம் உந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை கறவை சிற்றம் வங்கம்-தை. ஆண்டாள் திருவடிகளே சரணம் நாச்சியார் திருமொழி தனியன்கள் திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது...நேரிசை வெண்பா அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவிமல்லிநா டாண்ட மடமயில்-மெல்லியலாள்ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவைவேயர் பயந்த விளக்கு கட்டளைக் கலித்துறை கோலச் சுரிசங்கை மாயன்செவ் வாயின் குணம்வினவும்சீலத் தனள், தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் மாலைத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடையசோலைக் கிளி, அவள் தூநற் பாதம் துணைநமக்கே ஆண்டாள் திருவடிகளே சரணம் ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி 1. தையொரு திங்கள் கண்ணனை அடையவேண்டும் என்று ஆண்டாள் விரும்பினாள். மார்கழி மாதம் முழுதும் நோன்பு நோற்றாள். அவன் வரவில்லை. அவனை அடைந்தே தீர்வது என்று தீர்மானித்தாள். நல்ல பயனை யாரைக்கொண்டு அடைந்தால் என்ன? பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவன் மன்மதன். அவன் உதவியை நாடுகிறாள். நீ என்னைக் கண்ணனோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். அவனைக் குறித்து நோன்பு நோற்கிறாள் காமனைக் கொண்டு காமனைப் பயந்த காளையான கண்ணனை அடைய விரும்புகிறாள். கண்ணன் இணக்கு எனக் காமனைத் தொழுதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் காமனே! வேங்கடவற்கு என்று என்னை விதி 504. தையொரு திங்களும் தரைவிளக்கித்தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்துஅழகினுக் கலங்கரித் தனங்கதேவாஉய்யவு மாங்கொலோ வென்றுசொல்லிஉன்னையு மும்பியையும் தொழுதேன்வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கைவேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. புள்வாய் பிளந்தவனை அடைய எனக்கு உதவு 505. வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்துவெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்துமுள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்துமுயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவாகள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டுகடல்வண்ண னென்பதோர் பேரெழுதிபுள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில்புகவென்னை யெய்கிற்றியே வேங்கடவாணனென்னும் விளக்கினில்புக எனக்கு உதவு 506. மத்தநன் னறுமலர் முருக்கமலர்கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கிதத்துவ மிலியென்று நெஞ்செரிந்துவாசகத் தழித்துன்னை வைதிடாமேகொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டுகோவிந்த னென்பதோர் பேரேழுதிவித்தகன் வேங்கட வாணனென்னும்விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன் 507. சுவரில் புராணநின் பேரேழுதிச்சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவாஅவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் 508. வானிடை வாழுமவ் வானவர்க்குமறையவர் வேள்வியில் வகுத்தஅவிகானிடைத் திரிவதோர் நரிபுகுந்துகடப்பதும் மோப்பதும் செய்வதொப்பஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்றுஉன்னித் தெழுந்தவென் தடமுலைகள்மானிட வர்க்கென்று பேச்சுப்படில்வாழகில் லேன்கண்டாய் மன்மதனே கமலவண்ணன் என்னை நோக்குமாறு அருள் 509. உருவுடை யாரிளை யார்கள்நல்லார்ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்திருந்தவே நோற்கின்றேன் காமதேவாகருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்திருவுடை முகத்தினில் திருக்கண்களால்திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய் திரிவிக்கிரமன் என்னைத் தொடுமாறு அருள் 510. காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்கட்டி யரிசி யவலமைத்துவாயுடை மறையவர் மந்திரத்தால்மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்சாயுடை வயிறுமென் தடமுலையும்தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே கேசவனின் கால்பிடிக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடு 511. மாசுடை யுடம்பொடு தலையுலறிவாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டுதேசுடை திறலுடைக் காமதேவாநோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய் கடல்வண்ணனுக்கே பணிசெய்து வாழ்வேன் 512. தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கேபணிசெய்து வாழப் பெறாவிடில்நான்அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவுமதுவுனக் குறைக்குங்கண்டாய் உழுவதோரெருத்தினை நுகங்கொடுபாய்ந்துஊட்டமின் றித்துரந் தாலொக்குமே வைகுந்தப் பதவி அடைவர் 513. கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்கழலிணை பணிந்தங்கோர் கரியலறமருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்தமணிவண்ணற் கென்னை வகுத்திடென்றுபொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதைவிருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்விண்ணவர் கோனடி நண்ணுவரே அடிவரவு: தை வெள்ளை மத்தம் சுவரில் வான் உருகாயுடைய மாசு தொழுது கருப்பு-நாமமாயிரம் 2. நாமமாயிரம் மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்; கோலமிடுகிறார்கள்; மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். கண்ணா! நாங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறாய். உன் முகத்தைக் காட்டுகிறாய்! புன்முறுவல் செய்கிறாய்! எங்கள் சிற்றிலையும் அழிக்கிறாய், நெஞ்சையும் அழிக்கிறாய்! இது நியாயமா? என்று கூறுகிறார்கள். சிறுமியர் மாயனைத் தம் சிற்றில் சிதையேல்! எனல் கலி விருத்தம் நாராயணா! எங்கள் சிற்றிலைச் சிதையாதே 514. நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னைமாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமேகாமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்தீமைசெய்யும் சிரீதராஎங்கள் சிற்றில்வந்து சிதையேலே எங்கள்மீது ஏன் இரக்கம் உண்டாகவில்லை? 515. இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலைநன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே ஆனைகாத்தவனே! அருளாய் 516. குண்டுநீருறை கோளரீமத யானைகோள்விடுத் தாய்உன்னைக்கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள் சிற்றில்வந்து சிதையேலே கண்ணா! உன்முகம் மாயமந்திரமோ! 517. பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன் பேச்சும்செய்கையும் எங்களைமையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோநொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே எங்கள் உள்ளம் உன்னை நோக்கியே ஓடுகிறது 518. வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே இலங்கையை அழித்தவனே! எம்மைத் துன்புறுத்தாதே 519. முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அதுசுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல். யாங்கள் சிறுமியர்: எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்? 520. பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவையாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே எங்களைத் துன்புறுத்துவதால் உனக்கு என்ன பயன்? 521. வட்டவாய்ச்சிறுகாதையோடு சிறுசுளகும்மணலுங்கொண்டுஇட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரங்கையிலேந்தினாய்கட்டியுங்கைத் தாலின்னாமை அறிதியேகடல்கண்ணனே. சிற்றிலும் சிதைப்பான், சிந்தையும் சிதைப்பான் கோவிந்தன் 522. முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்துசிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தாமுற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்எம்மைப்பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார் குறை நீங்கி வைகுந்தம் அடைவர் 523. சீதைவாயமுதமுண்டாய் எங்கள்சிற்றில்நீசிதையேலென்று வீதிவாய்விளையாடும் அயர்சிறுமியர்மழலைச்சொல்லை வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன்றன் கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறைவின்றிவைகுந்தஞ்சேர்வரே. (சிறுமியர் கடற்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ சென்றால் மணலைக் குவித்து அதில் வாயில்கள் வைத்து விளையாட்டு(மேடுகள்) வீடுகள் அமைப்பது வழக்கம். இதைச் சிற்றில் (சிறுமை+இல்) என்று கூறவர்.) அடிவரவு: நாமம் இன்று குண்டு பெய் வெள்ளை முற்றிலாத பேதம் வட்ட முற்றத்தூடு சீதை-கோழி. 3. கோழியழைப்பதன் ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிலுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்; இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்; அருகில் இருந்த குருந்த மரத்தின்மீது அமர்ந்துகொண்டான். மாயனே! ஆயர் கொழுந்தே! நீ எப்படி இங்கு வந்தாய்! ஆயர்கள் எழுந்திருக்கும் முன் நாங்கள் வீடு செல்லவேண்டும்! நாங்கள் இந்தப் பொய்கைக்கு வருவது உனக்குத் தெரிந்துவிட்டது! இனி இப்பொய்கைக்கு வரவே மாட்டோம். தயைசெய்து எங்கள் சேலைகளைக் கொடுத்துவிடு என்னும் பாவனையில் ஆண்டாள் அருளிச் செய்கிறாள். இது கோபீ வஸ்த்ராபஹார சரித்திரத்தின் பகுதியாகும். கன்னியரோடு கண்ணன் விளையாடல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அரவணையில் பள்ளிகொண்டவனே! தொழுகிறோம். 524. கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்ஏழைமை யாற்றவும் பட்டோம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே மாயனே! எங்கள் ஆடைகளைத் தருக 525. இதுவென் புகுந்ததிங் கந்தோ இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்மதுவின் துழாய்முடி மாலே மாயனே எங்க ளமுதேவிதியின்மை யாலது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்குதிகொண் டரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய் இலங்கை அழித்தவனே! எங்கள் பட்டுத் துணிகளைத் தருக 526. எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்திவில்லாலி லங்கை யழித்தாய்நீ வேண்டிய தெல்லாம் தருவோம்பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே கண்ணீர் விடுகிறோமே! இரக்கம் இல்லையா? 527. பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்அரக்கநில் லாகண்ணநீர்கள் அலமரு கின்றவா பாராய்இரக்கமே லொன்று மிலாதாய் இலங்கை யழித்த பிரானேகுரக்கர சாவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய் பிரானே! எம் சிற்றாடைகளைத் தந்துவிடு 528. காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவிவேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோகோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதேகோலங் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் வேதனை தாங்க முடியவில்லை; பட்டாடைகளைத் தந்துவிடு 529. தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவவிடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோம்குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவேபடிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே எம் தாயர் கோபிப்பர்; ஆடைகளைக் கொடுத்துவிடு 530. நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானேஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே ஆயர் கொழுந்தே! அருள் செய் 531. மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானேசேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்கோமள ஆயர்கொ ழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் அசோதை திட்டுவாள்; ஆடைகளைக் கொடு 532. கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்துநெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமைஅஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசுமையி லீகூறை தாராய் வைகுந்தம் புகலாம் 533. கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டைபொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதைஇன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே அடிவரவு: கோழி இது எல்லே பரக்க காலை தடத்தவிழ் நீரில் மாமிமார் கஞ்சன் கன்னி-தெள்ளியார். 4. தெள்ளியார் பலர் மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும். ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு கோடிட்டு, கோவலன்வரில் கூடிடு கூடலே என்று கூறி பகவானை அடைய வேண்டும் என்ற பேராவலோடு குறி பார்க்கிறாள். ஆண்டாளுக்கு இப்படியும் ஒரு அனுபவம். கூடலிழைத்தல் கலி விருத்தம் அழகர் வருவார் என்றால் கூடலே கூடு 534. தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்பள்ளி கொள்ளு மிடத்தடி வொட்டிடகொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு 535. காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே வசுதேவர் கோமகன்வரில் கூடலே கூடு 536. பூம கன்புகழ் வானவர் போற்றுதற்காம கன்அணி வாணுதல் தேவகிமாம கன்மிகு சீர்வசு தேவர்தம்கோம கன்வரில் கூடிடு கூடலே காளிங்க நர்த்தனம் செய்தவன் வருவானா? 537. ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிடபூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்துவாய்த்த காளியன் மேல்நட மாடியகூத்த னார்வரில் கூடிடு கூடலே மதயானை உதைத்தவன் என்னைக் கூடுவானா? 538. மாட மாளிகை சூழ்மது ரைப்பதிநாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டுஓடை மாமத யானை யுதைத்தவன்கூடு மாகில்நீ கூடிடு கூடலே மதுரை வேந்தன் வருவானா? 539. அற்ற வன்மரு தம்முறி யநடைகற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்செற்ற வன்திக ழும்மது ரைப்பதிகொற்ற வன்வரில் கூடிடு கூடலே அசுரர்களைக் கொன்றவன்வரின் கூடலே கூடு 540. அன்றின் னாதன செய்சிசு பாலனும்நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்கொன்ற வன்வரில் கூடிடு கூடலே துவராபதிக் காவலன் வருவானா? 541. ஆவ லன்புட யார்தம் மனத்தன்றிமேவ லன்விரை சூழ்துவ ராபதிக்காவ லன்கன்று மேய்த்து விளையாடும்கோவ லன்வரில் கூடிடு கூடலே வாமனன் வரின் கூடலே கூடு 542. கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்றுபண்டு மாவலி தன்பெரு வேள்வியில்அண்ட மும்நில னும்அடி யொன்றினால்கொண்ட வன்வரில் கூடிடு கூடலே அழகன் வருவான் எனில் கூடலே கூடு 543. பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்குழக னார்வரில் கூடிடு கூடலே பாவம் வராது 544. ஊடல் கூட லுணர்தல் புணர்தலைநீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்கூட லைக்குழற் கோதைமுன் கூறியபாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே அடிவரவு: தெள்ளியார் காட்டில் பூமகன் ஆய்ச்சி மாட அற்ற அன்று ஆவல் கொண்ட பழகு ஊடல்-மன்னு. 5. மன்னு பெரும்புகழ் சோலையில் வாழும் குயிலே! நீ என்னோடு இருக்கிறாய்! கண்ணனின் பிரிவால் நான் துன்புறுவது உனக்கே தெரியும்! நீ இனிய குரலைப் பெற்று என்ன பயன்? கண்ணன் எங்கு இருக்கிறான் என்பது உனக்குத் தெரியும். அவனைக் கூவி என்னிடம் அழைத்துக்கொண்டு வா! புண்ணியனை வரக் கூவாய்! என்று ஆண்டாள் குயிலை வேண்டுகிறாள். இப்பத்துப் பாடல்களைப் பக்தியோடு கூறுவோர் திருமந்திரத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனை அடைவர். கண்ணனைக் கூவியழைக்குமாறு குயிலுக்குக் கூறல் (குயிற்பத்து) எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் குயிலே! என் பவளவாயன் வரக் கூவாய் 545. மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டேபுன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலேபன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய் குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய் 546. வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலேமெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய் குயிலே! என்தலைவன் வரவில்லை: அவன் வரக் கூவாய் 547. மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரிதாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்காதலி யோடுடன் வாழ்குயி லேஎன் கருமாணிக் கம்வரக் கூவாய் குயிலே! வைகுந்தன் வரக் கூவாய் 548. என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலேபொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய் குயிலே! என் காதலன் வரக் கூவாய் 549. மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சாஇன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியைஉன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய் இளங்குயிலே! என் தத்துவனை வரக் கூவாய் 550. எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்யமுத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே அழகிய குயிலே! சங்குசக்ரபாணியை வரக் கூவாய் 551. பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி சிறுகுயிலே! திருமாலை விரைந்து கூவாய் 552. சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலைஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே சிரீதரனிடம் மையல் கொண்டேன்: அவனை வரக் கூவாய் 553. பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். குயிலே! இன்று நாராயணனை வரக் கூவு 554. அன்றுல கம்மளந் தானையுகந் தடிமைக்கண வன்வலி செய்யதென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலேஇன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் நமோ நாராயணாய என்று சொல்லுவதற்குச் சமம் 555. விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பிகண்ணுறவென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லேஎன்ற மாற்றம்பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்னநண்ணுறு வாசக மாலைவல்லார்நமோ நாராய ணாயவென் பாரே அடிவரவு: மன்னு வெள்ளை மாதலி என்பு மென்னடை எத்திசை பொங்கிய சார்ங்கம் பைங்கிளி அன்று விண்-வாரணம். 6. வாரணமாயிரம் கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வருகிறான். என் காலைப் பிடித்து அம்மியின்மேல் எடுத்துவைக்கிறான். இவை எல்லாம் விரைவிலேயே நிறைவேறக் கண்ணன் அருள்வானோ! என்று தோழியிடம் கூறி மகிழ்கிறாள். மாயவன் தன்னை மணஞ்செயக் கண்ட தூய நற்கனவைத் தோழிக்குரைத்தல் கலி விருத்தம் திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக்கண்டேன் 556. வாரண மாயிரம் சூழவ லம்செய்துநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன் 557. நாளைவ துவைம ணமென்று நாளிட்டுபாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான், எனக்கு மணமாலை சூட்டக் கனாக்கண்டேன் 558. இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்துமந்திரக் கோடியு டுத்திம ணமாலைஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான் கங்கணம் கட்டுவதாகக் கனாக்கண்டேன் 559. நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கிபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்திபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னைகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான் மதுரை மன்னன் வரக் கனாக்கண்டேன் 560. கதிரொளி தீபம்க லசமு டனேந்திசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ளமதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் மதுசூதன் என் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் 561. மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூதமுத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான் கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன் 562. வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்துகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றிதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான் நான் அம்மி மிதிப்பதாகக் கனாக்கண்டேன் 563. இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்நம்மையு டையவன் நாராய ணன்நம்பிசெம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றிஅம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான் பொரிமுகம் தட்டுவதாகக் கனாக்கண்டேன் 564. வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டுஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்திஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்துபொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான் மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன் 565. குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்துமங்கல வீதிவ லம்செய்து மணநீர்அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். நன்மக்களைப் பெற்று மகிழ்வர் 566. ஆயனுக் காகத்தான் கண்டக னாவினைவேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே (பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அனுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அனுஸந்திப்பது வழக்கம். இப் பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்) அடிவரவு: வாரணம் நாளை இந்திரன் நாற்றிசை கதிர் மத்தளம் வாய் இம்மைக்கும் வரிசிலை குங்குமம் ஆயன்-கருப்பூரம். 7. கருப்பூரம் நாறுமோ வெண் சங்கே! பாஞ்சசன்னியமே! பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்! நீ அடைந்த பாக்கியத்தை என்ன வென்று கூறுவது! கண்ணபிரான் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்! வாயமுதைப் பருகுகிறாய்! நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்! இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்! ஆனால் ஒன்று! எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து நீ ஒருவனே பருகுவது நல்லதன்று! என்று கூறுகிறாள் ஆண்டாள். பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடுஞ் சுற்றமாக்கல் கலிவிருத்தம் மாதவனின் வாய்ச்சுவையும் பரிமளவும் எத்தகையவை! 567. கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோமருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே சங்கே! நீ பிறந்தது எங்கே! வளர்ந்தது எங்கே! 568. கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே கோலச் சங்கே! வாசுதேவன் கையில் வீற்றிருக்கிறாயே! 569. தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே வலம்புரியே! இந்திரனும் உனக்கு நிகராகமாட்டான் 570. சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியேஇந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே மதுசூதன் வாயமுதை நீயே உண்கின்றாயே! 571. உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரைஇன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளுமுண்கின்றாய் பாஞ்சசன் னியமே செங்கண்மாலின் வாயில் தீர்த்தமாடுகிறாய் 572. போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டுசேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடயவாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே சங்குத் தலைவனே! நீ பெற்ற செல்வம் அழகானது 573. செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்செங்கட் கருமேனி வாசுதே வனுடைய போல்அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,சங்கரையா! உன்செல்வம் சாலவ ழகியதே! சங்கே உன்மீது பெண்கள் குற்றம் சொல்கின்றனர் 574. உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,கண்படை கொள்ளில் கடல்வண்ணம் கைத்தலத்தேபெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே! பெருஞ்சங்கே! அமுதை நீ மட்டும் உண்பதோ? 575. பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே! இவற்றைப் பாடுவோர் அணுக்கராவர் 576. பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே அடிவரவு: கருப்பூரம் கடலில் தடவரை சந்திர உன்னோடு போய் செங்கமல உண்பது பதினாறா பாஞ்ச-விண் 8. விண்ணில் மேலாப்பு பிரிவாற்றாமையால் வாடும் தலைவி தலைவனைக் குறித்தோ, தலைவன் தலைவியைக் குறித்தோ ஒருவரைத் தூது விடுவது நம் நாட்டின் பழமையான வழக்கம். மேகம், கிளி, நாரை முதலியவற்றைத் தூது விடுவதை இலக்கியங்களில் காணலாம். பகவான் நீல நிறம் கொண்டவன், நீல நிறத்தில் ஆண்டாளுக்கு ஆசை. மழை காலம்! திருவேங்கடமலையிலிருந்து மேகங்கள் வருகின்றன. மேகங்காள்! உங்களோடு திருவேங்கடமுடையானும் வருகிறனோ? அவனோடு சேர்ந்தால்தான் என் உயிர் தரித்திருக்கும். இதை அவனிடம் சொல்லி என்னை ஏற்கச் செய்யுங்கள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள். மேகவிடு தூது தரவு கொச்சகக் கலிப்பா மேகங்காள்! என் வேங்கடவன் உங்களோடு வந்தனோ? 577. விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானேகண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனைபெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? வேங்கடத்தான் ஏதேனும் சொல்லியனுப்பினானோ? 578. மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னேகாமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே கோவிந்தனையே பாடி உயிர் தரித்திருப்பேன் 579. ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடிஅளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே அலர்மேல்மங்ககை மணாளனுக்கே என் உடல் உரிமை 580. மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்குஎன்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள் 581. வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின் 582. சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியைநிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னைநலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. வேங்கடவன் வந்தால் உயிர் நிற்கும் 583. சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே அவர் இதமான உரை தருவாரா? 584. கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லிநீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனைவார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே! பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ? 585. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னேகதியென்றும் தானாவான் கருதாதுஓர் பெண்கொடியைவதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே இந்த மேகவிடுதூது படிப்போர் பரமன் அடியர் ஆவர் 586. நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே அடிவரவு: விண் மா ஒளி மின் வான் சலம் சங்கம் கார் மத நாகத்தின்-சிந்துர 9. சிந்துரச் செம்பொடி ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி சவுந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாள் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை மணாளனிடம் இவள் மனம் சென்றது. திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடல் கலிநிலைத்துறை நான் உய்வேனோ? 587. சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்டசுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ அவனளித்த மாலை செய்த யுத்தம் 588. போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்றகார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே என் கைவளை பறித்துச் சென்றுவிட்டாரே! 589. கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பிவரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே. அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு? 590. பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள்வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்றஎம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே அடைக்கலம் புக எனக்கு ஓரிடம் கூறுங்கள் 591. துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்றசெங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே நான் சமர்ப்பிப்பதை அழகர் ஏற்பாரோ? 592. நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ கைங்கர்யம் செய்துகொண்டே இருப்பேன் 593. இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்கின்றன 594. காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோசோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே அவனது சங்கொலியும் நாணொலியும் என்று கேட்பேன்? 595. கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ திருமாலடி சேர்வர் 596. சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருதுவந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்றசுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்தசெந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே (திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது 6, 7 பாசுரங்களை மிகவும் பக்தியோடு அனுசந்திப்பது வழக்கம். ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில் வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம் உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.) அடிவரவு: சிந்துர போர் கருவிளை பைம்பொழில் துங்கநாறு இன்று காலை கோங்கலரும் சந்தொடு-கார். 10. கார்க்கோடல் பூக்காள்! காந்தள் மலர்களே! உங்களைப் போன்ற நீலவண்ணன் கண்ணன் எங்கே? கண்ணனின் பவள வாயைப் போன்ற பழங்களைக் கொண்ட கொடியே! அவனை சத்யவாதி என்று எல்லோரும் கூறுகின்றனர். என் விஷயத்தில் மாறிவிட்டானோ? கண்ணனின் புன்முறுவலை நினைவூட்டும் முல்லைக் கொடியே! என் எதிரில் தோன்றி என்னை வருத்தாதே! குயில்களே! ஈதென்ன கூச்சல்? திருவேங்கடவன் வந்து எனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக் கூடாதோ? மயில்களே! இது என்ன ஆட்டம்! குடக் கூத்தாடியவனை நினைவூட்டுகிறீர்களே! ஓயாது ஒலிக்கும் கடலே! உன்னிடம் தானே திருவனந்தாழ்வான் இருக்கிறான். அவன்மீது படுத்திருக்கும் பகவானிடம் என் துயர் சொல்லேன் என்று ஆண்டாள் புலம்புகிறாள். கோதாய்! என்ன சொல்லியும் கண்ணன் வரவில்லை! உன் தந்தை பெரியாழ்வார் அழைக்கும்போது கட்டாயம் வருவான். அப்போது அவனைச் சேவிக்கலாம் என்று தோழி கூறி ஆறுதல் அடைவிக்கிறாள். மாற்செய் வகையொடு மாற்றம் இயம்பல் கலிநிலைத்துறை காந்தள் மலர்களே! கடல் வண்ணன் எங்குற்றான்? 597. கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது அணிதுழாய்த்தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ. பகவானுடைய சோதியில் என்னைச் சேர்ப்பீர்களா? 598. மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாதுஎம்மைமாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே பாம்பணையார்க்கும் நாக்கு இரண்டோ? 599. கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டுஎம்மைஆவி தொலைவியேல் வாயழ கர்தம்மை யஞ்சுதும்பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே முல்லைக் கொடியே! அவர் சொல் பொய்யோ? 600. முல்லைப் பிராட்டி நீயுன் முறுவல்கள் கொண்டுஎம்மைஅல்லல் விளைவியே லாழிநங் காய்உன்ன டைக்கலம்கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே குயில்காள்! அவர் என்னைக் கூடுவாரா? 601. பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்நல் வேங்கடநாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்துகூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே மயில்களே! எனது நிலையைப் பாருங்கள் 602. கணமா மயில்காள் கண்ணபி ரான்திருக் கோலம்போன்றுஅணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே எனக்கு வேறு வழியே இல்லை 603. நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்உம்மைநடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்துஎம்மைஉடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே அழகர்பிரானை நான் தழுவத்தான் வேண்டும் 604. மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்றமெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்றஅழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே கடலே! என் துயர்களை நாகணைக்கே உரைத்தி 605. கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்துஉடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே விட்டுசித்தர் அழகரை வருவிப்பாரோ? 606. நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரைவல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே அடிவரவு: கார் மேல் கோவை முல்லை பாடும் கண நட மழையே கடலே நல்ல-தாம். 11. தாமுகக்கும் ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கை வளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழே விழுமாறு செய்தவிட்டான். மூவடிமண் பெற மாவலியிடம் நடந்து சென்றானே! அவனையே விரும்பும் எனக்கு நடையழகைக் காட்டக் கூடாதோ? பெண்ணின் வருத்தமறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்டானே! என் விஷயத்தில் மட்டும் வேறுபடுவானேன்? தம்மை விரும்புகிறவரைத் தாமும் விரும்புவார் என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டும் என்கிறாள். திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல் தரவு கொச்சகக் கலிப்பா என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்துவிட்டாரே! 607. தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோயாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே என் வளைகள் கழல்கின்றனவே! 608. எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடையகழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே என் இடரை அவர் தீர்ப்பாரா? 609. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே என் வளைமீது அவருக்கு என்ன ஆசை? 610. மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்றபிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்இச்சை யுடையரே லித்தெருவே போதாரே என் பொருள் அவருக்கு எதற்கு? 611. பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்றுஎல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்? 612. கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே! 613. உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்துபெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே அவர் எவ்வளவெல்லாம் பேசினார்! 614. பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே அவரது ஊர் அரங்கமே 615. கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்துஅண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்தபெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே அவர் சொல் பொய்க்காது 616. செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்தமெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே அடிவரவு: தாம் எழில் பொங்கு மச்சு பொல்லா கை உண்ணாது பாசி கண்ணாலம் செம்மை- மற்று. 12. மற்றிருந்தீர் உறவினர்களே! நான் பகவத் விஷய ஆசையின் மேல் நிலையில் இருக்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் பயனில்லை. அது என் காதில் விழாது; பதிலும் கூறமாட்டேன். என்னைக் காப்பாற்ற நினைத்தால் இவ்வாறு செய்யுங்கள்: கண்ணன் தன் வீரத்தைக் காட்டி மகிழ்வித்த வட மதுரைக்குக் கொண்டு போய் விடுங்கள். என் விரக நோயை நீங்கள் தீர்க்கமுடியாது. திருவாய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவனைச் சேவித்தால்தான் நோய் தீரும் என்கிறாள் ஆண்டாள். சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள் 617. மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னைஉற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தைபெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பிமற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின் மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள் 618. நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்பாணியா தென்னை மருந்துசெய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின் நந்தகோபாலன் இருக்கைக்கு என்னை உய்த்திடுமின் 619. தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லுவந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் கொந்தள மாக்கிப்பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற நந்தகோ பாலன் கடைத்தலைக்கேநள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின் யமுனைக் கரைக்கே என்னைச் செலுத்துங்கள் 620. அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்றுசெங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகாஇங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின் 621. ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்துழ திப்படாதேகார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்துபோர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் கண்ணன் பக்கல் என்னை அனுப்புங்கள் 622. கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்றுவேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்றுபார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின் திருத்துழாய் மாலையை எனக்குச் சூட்டுங்கள் 623. வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின் கோவர்த்தனத்திற்கு என்னை உய்த்திடுமின் 624. கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்பற்றியுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோகற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்துகொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின் துவராபதிக்கு என்னைச் செல்ல விடுங்கள் 625. கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் உலகளந்தானென்றுயரக்கூவும்நாட்டிற்றலைப்பழியெய்தி உங்கள்நன்மையழிந்துதலையிடாதேசூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கென்னையுய்த்திடுமின். இவற்றைப் பாடுவோர் வைகுந்தப்பதவி அடைவர் 626. மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவைபொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதைஇன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே அடிவரவு: மற்று நாணி தந்தை அங்கை ஆர்க்கும் கார்த்தண் வண்ணம் கற்றினம் கூட்டில் மன்னு-கண்ணன். 13. கண்ணனென்னும் தாய்மார்களே! எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள். அச்சுதன் அணிபொருட்கொண்டு அவலம் தணிமின் எனல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கண்ணனது பீதாம்பரத்தைக் கொண்டு வீசுங்கள் 627. கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனைபுண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதேபெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதகவண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள் 628. பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனைவேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதேகோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடிநீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே கண்ணன் சூடிய மாலையை எனக்குச் சூட்டுங்கள் 629. கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனைஅஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலைவஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே கண்ணனின் வாய்ச்சுவை எனக்கு வேண்டும் 630. ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனைஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறியநீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே கண்ணன் ஊதும் குழல்வாய் நீரைத் தடவுங்கள் 631. அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்றகுழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே கண்ணனின் திருவடிப் பொடியைப் பூசுங்கள் 632. நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டுபுடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே என்னைக் கண்ணனுடன் இணையுங்கள் 633. வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்துவெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளேகுற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடுஅற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே என் மார்பைப் பறித்துக் கண்ணன் மார்பில் எறிவேன் 634. உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாதகொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே ஒருநாள் கண்ணன் உண்மை சொல்வானா? 635. கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்றுமெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே துன்பக் கடலிலிருந்து நீங்குவர் 636. அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கைவில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதைவில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே அடிவரவு: கண்ணன் பால் கஞ்சை ஆரே அழில் நடை வெற்றி உள்ளே கொம்மை அல்லல்-பட்டி 14. பட்டி மேய்ந்து தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்பமடைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான். கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடுவதையும், அவன்மீது வெயில் படாமல் இருக்கக் கருடன் விரித்துப் பறப்பதையும், உடலில் வியர்வைத் துளிகள் படிந்த யானைக்குட்டிபோல் கண்ணன் விளையாடுவதையும், சங்கு சக்கரங்களைக் கொண்ட பரமபுருஷன் கேசம் தோளில் புரண்டு அலையும்படி விளையாடுவதையும் விருந்தாவனத்தில் கண்டோம் என்று கூறுகிறாள் ஆண்டாள். முதலை வாய்ப்பட்ட களிறு பகவான் அருளால் மீட்கப்பட்டு துயர் தீர்ந்ததுபோல் ஆண்டாளும் பிரிவுத் துன்பத்திலிருந்து மீண்டு பெருமகிழ்வு அடைந்தாள். இப்பத்தும் கூறுவோர் துன்பத்திலிருந்து விடுபட்டுக் கவலையின்றி வாழ்வர். விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். பலதேவனின் தம்பியை விருந்தாவனத்தே கண்டோம் 637. பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரேஇட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டிவிட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே கண்ணன் விளையாட்டைக் கண்டோம் 638. அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரேகணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலைமினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே கருடனது சிறகின்கீழ் வருவானைக் கண்டோம் 639. மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனைஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரேமேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே வியர்த்து விளையாடும் கண்ணனைக் கண்டோம் 640. கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி என்னைஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரேபோர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே விருந்தாவனத்தே வீதியில் கண்ணனைக் கண்டோம் 641. மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரேபீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே உதயசூரியன் போலும் கண்ணனைக் கண்டோம் 642. தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவுகரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே கருநிறக் கண்ணனைக் கண்டோம் 643. பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானைகருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரேஅருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே விளையாடும் கண்ணனைக் கண்டோம் 644. வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானைஅளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரேகளிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே அசுரர்களை அழித்த கண்ணனைக் கண்டோம் 645. நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்திவீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரேகாட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடியவேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே எம்பெருமான் அடிக்கீழ் வாழ்வர் 646. பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை பாரின்மேல்விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே அடிவரவு: பட்டி அனுங்க மால் கார்த்தண் மாதவன் தருமம் பொருத்தம் வெளிய நாட்டை பருந்தாள்-இருள் ஆண்டாள் திருவடிகளே சரணம்.