உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு தினசரி, இரு வேளை பூஜை, சனிக்கிழமை வார வழிபாடு, சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் பிரம்மோற்சவ வழிபாடு நடக்கிறது. மேலும், கார்த்திகை மாதத்தில் அங்குள்ள சிம்ம மலையில் விஷ்ணு தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபடுவர். இதையொட்டி, நேற்று நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும், மாலையில் சிம்ம மலையில் உள்ள சீனுவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு மலை மீதுள்ள கொப்பரையில், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !