கோட்டை மாரியம்மன் சிலையை போலீசில் ஒப்படைக்க வேண்டும்
ADDED :2879 days ago
சேலம்: கோட்டை மாரியம்மன் சிலையை, பாதுகாப்பு கருதி, போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை உறுப்பினர்கள், கோரிக்கை மனுவை தலையில் சுமந்து வந்து, கலெக்டரிடம் வழங்கினர். பின், அவர்கள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை மீறி, கோவில் கருவறை இடிக்கப்பட்டு, அம்மன் சிலை அகற்றப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மீது, நம்பிக்கை இல்லை. பாதுகாப்பு கருதி, கட்டுமானப் பணி முடியும் வரை, பெரிய மாரியம்மன் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும். கும்பாபி?ஷகம் நடக்கும்போது, சிலையை பெற்று, நிறுவிக்கொள்ள வேண்டும். சிலையை கூட, அதிகாரிகள் மாற்றக்கூடும் எனும் அச்ச உணர்வே, இக்கோரிக்கைக்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.