எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் 7ல் பொங்கல் விழா
ADDED :2878 days ago
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், பொங்கல் திருவிழா, கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 29ல் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுகின்றனர். நாளை இரவு, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் எக்கட்டாம்பாளையம், நொய்யல், புதுவலசு, தாமரைக்காட்டுவலசு பகுதி பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருவர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம், 7ல் நடக்கிறது. அன்று காலை கோவில் வளாகத்தில், திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர்.