உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆராதனை

அலவாய்மலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆராதனை

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, அலவாய்மலை அமைந்துள்ளது. கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இதனை கொங்கண மலை என்ற பெயரும் உண்டு. கோவில் அருகே உள்ள சுனையில், ஊற்றெடுக்கும் நீரை பருகினால், பெண்களுக்கு கர்ப்பக்கால பிரச்னைகள் யாவும் தீரும் என்றும், கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கள் அன்றும் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், அடுத்தாண்டு கார்த்திகைக்குள் தங்களுக்கு உண்டான பிரச்னைகள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இவ்வாறு சிறப்பு பெற்ற ஸ்தலமான அலவாய்மலை சுப்பிரமணிய சுவாமிக்கு, கார்த்திகை மாதம் மூன்றாம் திங்களான நேற்று எட்டாம் ஆண்டாக அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !